வங்கிச் சேவையினைத் துரிதமாக்குவதற்கும் எளிமையாக்குவதற்கும் மிடுக்காக்குவதற்கும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் வங்கிச் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கும்; எஸ்டிபி வங்கியினால் பெருநிறுவன (கோபரேட்) இணையவழி வங்கிச் சேவைத் தீர்வு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கேயும் எந்தநேரத்திலும் அணுகக்கூடிய இணையத் தொடர்பினைக் கொண்டு பெருநிறுவன வாடிக்கையாளர்கள் செயற்பாட்டு மூலதனம் மற்றும் நிதிகளின் பூரணமான முகாமைத்துவத்திற்காக கம்பனி நிதிகள் மற்றும் கொடுக்கல்வாங்கல் பற்றிய பதிவுகளை நிகழ்நேரத்தில் அணுகும் வசதியினை எஸ்டிபி வியாபார இணைய வங்கிச்சேவை வழங்குகின்றது. எவ்வித சிரமங்களுமின்றி சம்பள விபரப் பட்டியல்கள் முதல் தன்னியக்கமாக்கப்பட்ட கொடுப்பனவுகள் வரையான உங்கள் கம்பனியின் சகல நிதி விடயங்களையும் சில எளிமையான சொடுக்கல்கள் மூலம் எஸ்டிபி வியாபார இணைய வங்கிச்சேவை எளிமையாக்கியுள்ளது.
- கொடுக்கல் வாங்கல் டாஷ்போட்
- பல்பயனாளர் முகாமைத்துவம்
- வாடிக்கையாளர் ஒன்போடிங்
- நிதி நிலைமை மற்றும் கொடுக்கல் வாங்கல் வரலாறு
- காசு நகர்வு
- சம்பளப் பதிவேற்றம்
- பெருமளவிலான பரிமாற்றம்
- குழுமக் கம்பனி கணக்குகளைக் கையாளல்
- *அரசாங்கக் கொடுப்பனவு
- வேண்டுகோள்களைச் செயன்முறைப்படுத்தல்
- ஒன்லைன் உதவி
- வங்கித் தகவல் மையம்
- அங்கீகாரங்களை முகாமைத்துவம் செய்வதற்காக மொபைல் செயலியுடன் ஒருங்கிணைதல்
- கம்பனிகளினுள் உருவாக்கப்பட்ட தற்போது பயன்படுத்தப்படுகின்ற முன்றாம் தரப்பு முறைமைகளுடன் ஒருங்கிணைதல்
- எந்த இடத்தில் இருந்தும் எந்தநேரத்திலும் அணுகக்கூடிய சௌகரியமானதும் பூரணமானதும் உயர் பாதுகாப்பினைக் கொண்டதுமான கோபரேட் வங்கிச் சேவைத் தீர்வு
- உள்வரும் கொடுப்பனவுகளை உடனடியாக அங்கீகரித்து கொடுக்கல் வாங்கல்கள் பற்றி நிகழ்நேரத்தில் அறியத்தரல்
- கம்பனியின் பிரதானமான வங்கிச்சேவை விபரங்கள் மற்றும் ஏனைய சேவைகள் ஆகியவற்றினை ஒரே பார்வையில் நோக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய வசதியினை வழங்கும் பயனாளருக்கு மிகச் சௌகரியமான இடைமுகத்துடன் கூடிய தனிப்பட்ட முறையிலமைந்த டேஷபோட்
- மொபைல் ரெடி
- வங்கிச்சேவைப் பதிவுகளை உடனடியாக அணுகக்கூடியமையுடன் நெகிழ்வுத்தன்மைமிக்க மற்றும் துரித அறிக்கைச் செயன்முறைப்படுத்தல்
- ஏனைய எஸ்டிபி வங்கிச் சேவைகளையும் மேம்பாடுகளையும் அணுகக்கூடியதாக இருத்தல்
- மரபுரீதியான ஆவணச் செயன்முறைப்படுத்தலை பதிலீடு செய்தல்
*அரச கட்டணங்களை வணிக இணைய வங்கி (Business Internet Banking - BIB) வழியாக எளிதாகச் செலுத்தலாம். இதன் மூலம் பணம் செலுத்தக்கூடிய முக்கிய நிறுவனங்கள்:
- இலங்கை சுங்கத் துறை
- உள்நாட்டு வருவாய் துறை (IRD)
- ஊழியர்கள் நல நிதி (EPF)
- முதலீட்டு வாரியம் (BOI)
- இலங்கை துறைமுக ஆணையம் (கப்பல்/சரக்கு மற்றும் அனுமதி பத்திரம்)
- இலங்கை தரநிலைகள் நிறுவனம்
- இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு துறை
- வர்த்தகத் துறை
- மத்திய வைப்பு முறைமை (Central Depository System)
- உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் (170-க்கும் மேற்பட்ட அரச அமைப்புகள்)
↑

