திருப்திகரமான, கடப்பாடுமிக்க, வலுவூட்டப்பட்ட மற்றும் ஈடுபாடுமிக்க தொழிற்படையினைப் பேணுவதற்காகச் சிறந்த மனித உறவுகளை மதித்து மேம்படுத்துகின்ற வேலைத்தளக் கலாச்சாரத்தினை SDB வங்கி போஷpக்கின்றது. எமது இயக்கத்தின் தன்மையும் தாக்கமும் எமது அணியின் தீவிர ஆர்வம் மற்றும் கடப்பாடு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. இந்த அணியே எமது நாட்டின் துரித வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்குப் பின்னாலிருக்கின்ற உந்துசக்தியாகும்.
நாம் எந்த அளவுக்கு எமது தொலைநோக்கு மற்றும் பணிநோக்கினால் உந்திச் செலுத்தப்படுகின்றோமோ, அந்த அளவுக்கு நாம் எமது புதிய கருத்துக்களினாலும் புத்தாக்கம்மிகு சிந்தனைகளினாலும் உந்திச் செலுத்தப்படுகின்றோம். தகைமைமிக்கவர்களை, ஆற்றல் கொண்டவர்களை, எமது மைய விழுமியங்களை அரவணைத்து எமது வங்கியின் தனித்துவம் மற்றும் சிலாகிக்கப்படுகின்ற அடையாளத்தினை எமது வங்கிக்கு வழங்குகின்ற அந்தச் சிறப்பு அம்சத்தினைக் கொண்ட சின்னத்தின் தூதுவராகச் செயற்படுவதற்கான ஆர்வத்தினை உடையவர்களை SDB வரவேற்கின்றது.
செயலாற்றுகையினால் உந்தப்படும் கலாசாரத்திலே SDB அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. மனித மூலதனம் எனப்படும் எமது மிகவும் பெறுமதிமிக்க சொத்தில் நாம் அதீத எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளதுடன் எதிர்காலத்திலே இந்த வியாபாரத்தினை உந்திச் செலுத்தக்கூடிய ஆற்றலுள்ள தனிநபர்களில் நாம் முதலீடு செய்வதற்குப் பெரும் ஆர்வத்தினைக் கொண்டுள்ளோம். மேலும், எமது பணியாளர்களின் பங்களிப்பு மற்றும் செயலாற்றுகை மட்டத்திற்கு அமைவாக நாம் அவர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகின்றோம்.
 
- Legal Assistant - Western Region (Junior Executive Grade) மேலும் பார்க்க
- Assistant Company Secretary (Manager Grade) மேலும் பார்க்க
- Branch Manager – Jaffna (Manager Grade) மேலும் பார்க்க
- Legal Officer – Project Basis (Western & Northern Regions) மேலும் பார்க்க
- Executive - Finance மேலும் பார்க்க
- RMV Coordinator (Executive Grade) மேலும் பார்க்க
- Manager – Information Security மேலும் பார்க்க
- Banking Associate மேலும் பார்க்க