SDB bank | SME Leasing Sri Lanka | SDB bank | Vehicle, Machinery and Equipment

SME Leasing Sri Lanka | SDB bank | Vehicle, Machinery and Equipment

இப்போது விசாரிக்கவும்

ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஒப்பற்ற குத்தகைத் தீர்வுகளை வழங்குவதில் SDB குத்தகையானது தொடர்ச்சியாகக் கடப்பாடு கொண்டுள்ளது.  இது எவ்விதமான பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்குத் தீர்வினை வழங்குகின்றது. 

அம்சங்களும் நன்மைகளும்
  • போட்டித்தன்மைமிகு விகிதங்களுடன் நெகிழ்வுத்தன்மைமிகு மீள்கொடுப்பனவுத் திட்டங்களுடன் வர்த்தகத் தேவைப்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குத்தகைப் பொதி.
  • முதிர்ச்சிக் கொடுப்பனவுகள் மீதான கவர்ச்சிமிகு கழிவுகள்
  • நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்புக்கள் மூலமாகக் குத்தகை வசதிகளுக்கான இலகுவான அணுகல்
  • தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கு குத்தகை வசதிகள் உள்ளன
 
 
தகைமை
  • 18 வயதிற்கு மேற்பட்ட, தேவையான மீள்கொடுப்பனவு ஆற்றலைக்கொண்ட, SDB கடன் தெரிவடிப்படையினைப் பூர்த்தி செய்கின்ற எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் SDB குத்தகை வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் ஆவணங்கள்
  • உரிய முறையில் நிரப்பப்பட்ட குத்தகை விண்ணப்பப்படிவம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
  • வருமானத்தை உறுதிப்படுத்தும் வங்கிக்கூற்றுக்கள்
  • குத்தகைக்கு எடுக்கப்படவுள்ள வாகனம் அத்துடன் / அல்லது இயந்திரத்தின் கட்டணப் பட்டியலும் பெறுமதிக் கணிப்பு அறிக்கையும்
  • வியாபாரப் பதிவு