SDB bank | எஸ்எம்ஈ பிளஸ்

எஸ்எம்ஈ பிளஸ்

சமுதாயங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற அதேவேளை, அவற்றின் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கென இது விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  SME பிளஸ் திட்டமானது வியாபாரத்தினை ஆரம்பிக்கின்ற அல்லது ஏற்கனவே செய்யும் தொழிலினை விஸ்தரிக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாண்மைகளின் நிதித் தேவைகளுக்கான துரிதமான நிதி வசதியினை வசதிப்படுத்துகின்றது.

அம்சங்களும் நன்மைகளும்
  • பொருத்தமான சலுகைக் காலத்துடன் நியாயமான வட்டி வீதம்
  • வருமானப் பாங்கு மற்றும் மீள்கொடுப்பனவு ஆற்றல் ஆகியவற்றுடன் இயைபுற்ற நெகிழ்வுத்தன்மை மிக்க மீள்கொடுப்பனவுக் காலப்பகுதியுடன் வியாபாரத் தேவைப்பாடுகளுக்குப் பொருந்தும் வகையிலான கடன் பெறுமதிகள்
  • வியாபார வழிகாட்டல் மற்றும் ஆலோசனைச் சேவைகள்
தகைமை
  • 18 முதல் 65 வயது வரையுள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜையும் SME பிளஸ் கடன் திட்டத்தினைப் பெற்றுக்கொள்வதற்குத் தகைமையுடையவராவார்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)