ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்காகவும் இலங்கை மின்சார சபையின் ஓய்வுபெற்றவர்களுக்காகவும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட உபஹாரக் கடன் திட்டமானது இலங்கை சிரேஷ;ட பிரஜைகள் அவர்களின் ஓய்வுக்குப் பின்னரான வாழ்க்கையின்போது, மகிழ்ச்சியினையும் திருப்தியினையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்களை வலுவூட்டுகின்ற அதேவேளை தேசியப் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்குகின்றது.
அம்சங்களும் நன்மைகளும்
- 5 மில்லியன் ரூபாய் வரையிலான கடன்கள்
- 10 வருடங்கள் வரையிலும் மேலும் 75 வயது வரையிலும் மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி
- ஆகக்குறைவான காப்புறுதிக் கட்டணம்
- சகல விண்ணப்பதாரிகளுக்குமான தன்னியக்கக் கடன் பாதுகாப்பு
- ஓய்வூதியச் சம்பளங்களைத் துரிதமாக மாற்றுவதற்குரிய வசதி
தகைமை
- 75 வயதிற்குக் குறைந்த ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களும் இலங்கை மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற்றவர்களும்
- கடனுக்கு விண்ணப்பிப்பவரின் ஓய்வூதியத்தினை SDB கணக்கிற்கு வைப்புச் செய்தல்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
- வங்கியினால் தேவைப்படுத்தப்படும் வேறு ஏதாவது ஆவணங்கள்
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்