SDB bank | Special Notice - 18/12/2025

Special Notice - 18/12/2025

விசேட அறிவித்தல் – 18 டிசம்பர் 2025

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான விசேட நிவாரணத் திட்டம்.

அண்மைய சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வருமானம் அல்லது வணிகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கான விசேட நிவாரணத் திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் நிவாரணத் திட்டத்திற்கு இணங்க, அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு SDB வங்கி (SDB bank) பின்வரும் சலுகைகளை வழங்கவுள்ளது.

தகைமைகள் மற்றும் விண்ணப்பித்தல்

  • அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் வருமானம் அல்லது வணிகம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் வணிகக் கடன் பெறுநர்கள் இந்த நிவாரணத்தைப் பெறத் தகுதியுடையவர்கள்.
  • கோரிக்கைகள் அனைத்தும் 2026 ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலமாகவோ அல்லது மின்னணு முறையிலோ (Electronically) வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எமது நிவாரண உதவிகள்:

  • மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளை தற்காலிகமாக ஒத்திவைத்தல்: உங்களது உடனடி நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, தற்போதுள்ள கடன்களுக்கான மாதாந்தத் தவணைக் கொடுப்பனவுகளை 03 முதல் 06 மாத காலத்திற்கு ஒத்திவைத்தல்.
  • கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் புதிய கடன்கள்: வணிகச் செயற்பாடுகளை விரைவாக மீட்டெடுக்கவும், சேதமடைந்த சொத்துக்களை மீண்டும் ஈடு செய்யவும் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பெறவும், விரிவான மதிப்பீட்டிற்கு உட்பட்டு சலுகை வட்டி விகிதத்தில் புதிய கடன்கள் வழங்கப்படும்.
  • அபராத வட்டி மற்றும் கடன் மறுசீரமைப்பு கட்டண விலக்கு: 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை அபராத வட்டி மற்றும் கடன் மறுசீரமைப்பு/திருத்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது.

View the circular

 

 

E-Calendar 2025