

SDB உடன் நீங்கள் கொண்டிருக்கின்ற நிலையான வைப்பு வசதியுடன், உங்களுக்கு நாங்கள் உயர் பாதுகாப்புக் கொண்ட, ஆபத்துக்களற்ற நிதி முதலீட்டினை உத்தரவாதமளிக்கப்பட்ட ஒரு தொகைப் பணத்துடன் முதிர்ச்சிக் காலத்தின் முடிவின்போது வழங்குகின்றோம். எமது உயர் கவர்ச்சிமிக்க மற்றும் நிலையான வட்டி வீதங்களை நீங்கள் பெற்றுக்கொள்கின்ற அதேவேளை சந்தைத் தளம்பல்களினாலும் பொருளாதாரத் தளம்பல்களினாலும் பணவீக்கத்தினாலும் ஏற்படக்கூடிய ஏதாவது இழப்புக்களிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
அம்சங்களும் நன்மைகளும்
- கவர்ச்சிமிக்க உயர் வட்டிவீதம்
- உங்களது முதலீட்டுக்கான உச்சப் பாதுகாப்பு
- வைப்புக்களின் 90 சதவீதம் வரையிலான தொகையினை உடனடியாகக் காசாக மீள வழங்கும் வசதி
- 10000.00 ரூபாவினைக் கொண்டு நிலையான கணக்கொன்றினை ஆரம்பிக்க முடியும்
- பயனாளர்/பயனாளர்களை நியமிப்பதற்கான தெரிவு
- இணைந்த கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கான ஆற்றல்
தகைமை
-
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஒரு நிலையான வைப்பினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY
- Visit the nearest SDB bank branch
- Call our 24x7 Call Centre on 0115 411411
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்
