Convenient Mobile Banking App | SDB bank Sri Lanka | SDB bank

வாடிக்கையாளர்கள் அவர்களின் அடிப்படை நாளாந்த வங்கிச் சேவைகளை மிகவும் சௌகரியமாகத் துரித வேகத்தில் அதிகரித்த பாதுகாப்புடன் மேற்கொள்வதை எமது தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் வங்கிச் சேவைச் செயலி இயலுமாக்குகின்றது.  வங்கிச் சேவைக் கொடுக்கல் வாங்கல்களை உங்களின் காலடிக்கு நாம் இப்பொழுது கொண்டுவந்திருப்பதன் மூலமாக புதிய உலக வங்கிச் சேவைத் தீர்வுகளை நீங்கள் அனுபவித்து அவற்றினை மென்மேலும் கண்டறியலாம்.  

அம்சங்களும் நன்மைகளும்
  • வாடிக்கையாளர்கள் செலவுச் சிக்கனமான முறையிலே கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைனிலே மேற்கொள்ளும்போதே கணக்கின் மீதி தொடர்பான தகவல்களையும் கொடுக்கல் வாங்கலின் வரலாறு பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொண்டு உள்நிலையான மற்றும் வெளிநிலையான நிதி மாற்றங்களை நிறைவேற்றுவதற்கு SDB வாடிக்கையாளர்களை இயலுமாக்குகின்றது.
  • எங்கிருந்தும் எந்த நேரத்திலும் அதியுச்ச சௌகரியத்தினைக் கொண்ட வங்கிச் சேவைத் தீர்வுகளை ஒன்லைன் மூலம் அணுக முடியும்
  • இலங்கையின் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் சமூகத்தின் மொபைல் வங்கிச் சேவைக்கான அதிகரித்த கேள்வியினைப் பூர்த்தி செய்யும்முகமாக ios மற்றும் android தளங்களில் பாவிப்பதற்கு மிகவும் இலகுவான மொபைல் செயலி மூலமான மிடுக்கான வங்கிச் சேவை
  • உங்கள் SDB Mobile Banking App ன் மூலம் வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே நிலையான வைப்பொன்றினை ஆரம்பித்திடுங்கள் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது). கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்: