SDB bank | LMD' இன் அறிமுக ‘Most Awarded’ பிரசுரத்தின் Top 50 தரப்படுத்தலில் SDB வங்கி தெரிவு

LMD' இன் அறிமுக ‘Most Awarded’ பிரசுரத்தின் Top 50 தரப்படுத்தலில் SDB வங்கி தெரிவு

LMD' இன் அறிமுக ‘Most Awarded’ பிரசுரத்தின் Top 50 தரப்படுத்தலில் SDB வங்கி தெரிவு

LMD சஞ்சிகையின் அறிமுக பிரசுரமான ‘Most Awarded’ இன் Top 50 நிறுவனங்கள் தரப்படுத்தலில் SDB வங்கி இடம்பிடித்துள்ளது. அதனூடாக, இலங்கையிலுள்ள சிறந்த கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில் உயர்ந்த ஸ்தானத்தைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுகளில் உச்சம் என புகழ்பெற்றுள்ளதுடன், உள்நாட்டிலும் சர்வதேச வியாபார தளத்தில் பெற்றுக் கொண்ட கௌரவிப்புகளின் பிரகாரம் நாட்டிலுள்ள சிறந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நாட்டிலுள்ள சிறந்த வியாபார ஸ்தாபனங்கள் பெற்றுக் கொண்ட ஒட்டுமொத்த விருதுகளின் பிரகாரம்இ நாட்டின் சிறந்த வியாபாரங்களை தரப்படுத்துவதாக ‘Most Awarded’ அமைந்துள்ளது.

அறிமுக பிரசுரத்தின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்த 2019 ஜனவரி முதல் 2020 செப்டெம்பர் வரையிலான ஆய்வூ காலப்பகுதியில், நாட்டின் பல பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உள்நாட்டு வியாபாரங்கள் போன்றவற்றை பின்தள்ளி, இலங்கையின் சிறந்த விருதுகளைப் பெற்ற 50 நிறுவனங்கள் வரிசையில் SDB வங்கி முன்னேறியிருந்தது.

இலங்கையின் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களை ஊக்குவிக்கும் வங்கி எனும் தனது கீர்த்தி நாமத்தின் பிரகாரமும், தேசிய அபிவிருத்தியை ஊக்குவிக்கும் வங்கி எனும் வகையிலும், நாட்டின் போட்டிகரத்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் வரிசையில் உறுதியாக வளர்ச்சியை பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதுபோன்று, டிஜிட்டல் புத்தாக்கத்தில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்துகின்றமையினூடாக, அதன் நிறுவனசார் நிலைப்பாட்டை மேம்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இதில், வியாபார இணைய வங்கிச் சேவை அறிமுகம், SDB மொபைல் App ஊடாக நவீன வங்கியியல் சேவைகளை முன்னெடுக்கும் வசதி, மொபைலில் இயங்கக்கூடி இணையத்தளத்தின் மீள அறிமுகம் மற்றும் VISA அட்டையின் அறிமுகம் மற்றும் வாழ்க்கைத்தர கொடுப்பனவூகள் app ஆன UPay இன் மேம்படுத்தல் போன்றன இதில் அடங்கியூள்ளன. UPay இனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமது ஸ்மார்ட் தொலைபேசிகளினூடாக கொடுப்பனவூகளையூம், பணப் பரிமாற்றங்களையூம் மேற்கொள்ளும் சௌகரியம் வழங்கப்படுகின்றது.

Related Press Releases