
விசேட திட்டங்களுக்கான கடன்கள்
சட்டப்பூர்வமான அனுமதியுடைய சிறப்பு திட்டங்களுக்காக, அனைத்து சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கூட்டுறவு / சமுதாய கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
- கடன் தொகையானது சங்கத்தின் திறன் மற்றும் திட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள வட்டி வீதத்தில் வழங்கப்படும்.
- ரூ.20 மில்லியன் வரையில் உத்தரவாதங்கள் இல்லாத கடன் தொகை
- முன்னைய கடன்களை திருப்திகரமான முறையில் மீளச்செலுத்திய கூட்டுறவுகளுக்கு, வாரிய கடன் குழு மற்றும் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல்களுடன் ரூ. 30 மில்லியன் வரையில் உத்தரவாதங்களற்ற கடன் தொகை.
- ஆகக்கூடிய சலுகைக் காலமாக 2 வருட காலத்துடன் கூடிய 10 வருடங்கள் வரையிலான மீளச்செலுத்தும் காலம்.
தகைமைகள்
- சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
- ஒவ்வொரு கடன்களை பொறுத்து, அவற்றுக்கான ஆபத்தை குறைப்பதற்காக பொருத்தமான உத்தரவாதங்கள் அவசியமாகும்.
அவசியமான ஆவணங்கள்
- முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
- சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
- சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
- சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
- இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
- சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
- கையொப்ப அட்டை.
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்