Convenient Savings Accounts Sri Lanka | SDB bank | SDB bank

Convenient Savings Accounts Sri Lanka | SDB bank

வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சிமிகு வட்டி வீதத்தினை SDB சேமிப்புக்கள் வழங்குகின்ற அதேவேளை, எந்த இடத்திலும் நிதியினை அணுகக்கூடிய வசதியினையும் இச்சேமிப்பு வழங்குகின்றது.  முன்னேற்றகரமான சேமிப்புப் பயணத்தினை ஆரம்பிப்பதற்கு இதுவொரு சிறந்த படிக்கல்லாகக் காணப்படுவதுடன் எமது வாடிக்கையாளர்களின் மத்தியில் நிதிப் பாதுகாப்புக் கலாச்சாரத்தினையும் இது மேம்படுத்துகின்றது.

அம்சங்களும் நன்மைகளும்
  • வட்டியானது நாளாந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டு, சேமிப்பு மீதியின் அடிப்படையில் மாதாந்தம் பற்று வைக்கப்படுகின்றது
  • நாடு முழுவதிலும் SDB வங்கி ATMகளில் அல்லது வேறு VISA ATMகளில் பயன்படுத்தப்படக்கூடிய SDB VISA கடன் அட்டை. நாடு முழுவதும் உள்ள VISA குறியீட்டினைக் கொண்டுள்ள வியாபார நிலையங்களில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காகக் கடன் அட்டையினைப் பயன்படுத்த முடியும்
  • நிலையியல் கட்டளை வசதிகள்
  • கணக்கு வைத்திருப்பவர் சடுதியாக இறக்க நேரிடுகையில் பயனாளர்/பயனாளர்களை ஒருவரினைக் கணக்குக்கு நியமிக்கக்கூடிய வசதி
  • SDB மொபைல் செயலி, எஸ்எம்எஸ் வங்கிச் சேவை, யுபே வியாபார இணைய வங்கிச் சேவை மற்றும் mCash போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட டிஜிட்டல் வங்கிச் சேவைத் தளங்கள்
தகைமை
  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் SDB சேமிப்புக் கணக்கினைத் திறக்க முடியும்
  • ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு ரூ.500/-
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)