
இலங்கையர்கள் எப்போதுமே தங்கத்தினையும் தங்க ஆபரணங்களையும் பாதுகாப்பான, நீண்டகால முதலீடுகளாகக் கருதிவருவதுடன் தற்பொழுது SDB அறிமுகப்படுத்தியுள்ள ரன்மினிக் கடன் திட்டத்தின் மூலமாகத் தங்கத்தினைக் கொள்வனவு செய்வது மிக இலகுவானதாக மாறியுள்ளது.
வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற எந்த ஆபரண விற்பனையாளரிடமிருந்தும் தங்க ஆபரணங்களை, தங்க நாணயங்களை அல்லது தங்க பிஸ்கட்களை (22 கரட் மற்றும் அதற்கு மேல்) கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அல்லது காசுக்காக அல்லது கடனுக்காகத் தங்கத்தினை அடகு வைக்கும் நோக்கத்திற்காக அவற்றினைக் கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரன்மினி ஊடாக நீண்டகால நிதிக் கடப்பாட்டினைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்கின்றனர்.
- அடகு வைத்தல் மற்றும் கொள்வனவுத் தெரிவுகள் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் அல்லது தங்க பிஸ்கட்களிற்குக் கிடைக்கக்கூடியதாக உள்ளன. (22 கரட் மற்றும் அதற்கு மேல்)
- போட்டித்தன்மைமிகு வட்டி வீதங்கள்:
- ரன்மினி கடன் 20%
- ரன்மினி அடகு 18.5%
- SDBஇனால் மதிப்பிடப்பட்ட தங்கப் பெறுமதியின் 100 சதவீதம் வரையில் நிதியிடப்பட முடியும். மொத்தக் கட்டணப் பட்டியல் இடப்பட்ட தொகைக்குப் பங்களிப்பு வழங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
- ஆகக்கூடுதலான கடன் தொகை 500,000 ரூபாய் மற்றும் ஆகக்குறைந்த கடன் தொகை 100,000 ரூபாய்
- வாடிக்கையாளர்கள் முதலீட்டுச் சேமிப்புக் கணக்கினை ஆகக்குறைந்த வைப்பான 500 ரூபாயுடன் SDBஇல் ஆரம்பிக்க வேண்டும்.
- மாதாந்தச் சம்பளம் / தவணைக் கொடுப்பனவினைப் பற்றுவைப்பதற்கு வாடிக்கையாளர்கள் இணங்க வேண்டும்.
- 48 மாதங்கள் வரையிலான மீள்கொடுப்பனவுக் காலப்பகுதி
- உத்தரவாதப்படுத்துனர்கள் தேவையில்லை
- நிரந்தர சேவை கருத்திற் கொள்ளப்படுவதில்லை
- கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் கடனின் முழுமையான மீள்கொடுப்பனவு பூர்த்தி செய்யப்படும் வரையில் வங்கியில் வைத்திருக்கப்படும்
- வங்கியினால் மதிப்பிடப்பட்ட தங்கப் பெறுமதியின் 80% நிதியிடப்படும். மீதி வாடிக்கையாளரினால் வழங்கப்படல் வேண்டும்.
- மீள்கொடுப்பனவினை எந்த நேரத்திலும் மேற்கொள்ள முடியும்
- தங்க ஆபரணங்கள் ஒரு வருடத்தில் மீட்கப்பட வேண்டும்
- ஒரு வருட முடிவின்போது, வட்டியின் பூரணத் தொகையினைக் கொடுத்துத் தீர்ப்பதன் மூலம் மீண்டும் அடகுவைக்க முடியும்.
- கொள்வனவு செய்யப்படவேண்டிய தங்க நகையினைக் குறிப்பிட்ட வாடிக்கையாளர் அடையாளங்கண்டு, அதன் விபரங்கள் விற்பனையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விற்பனைக்கான கட்டணப் பட்டியல் மூலமாக வங்கிக் கிளைக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
- நேரடியான கொடுப்பனவு நகையினை விற்பவருக்கு அனுப்பிவைக்கப்படும்.
- வாடிக்கையாளரின் பங்களிப்பு கடனினை வினியோகிப்பதற்கு முன்னர் SDBஇல் உள்ள சேமிப்புக் கணக்கினில் வைப்புச் செய்யப்படல் வேண்டும்.
- ஒரு கடனின் கீழ் பல பொருட்கள் காணப்படின்; கடனினைக் கொடுத்துத் தீர்த்ததும் தனிப்பட்ட பொருட்களைத் தற்காலிக அடிப்படையில் விடுவிக்க முடியும்.
- குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள நன்மதிப்பு மிக்க நகைக் கடையிலிருந்தே நகைகள் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
- பின்வருவனவற்றுக்கான நிலவும் வட்டி வீதத்திலிருந்து 1% சலுகை வீதம்,
-
20,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினைக் குறைந்தது 6 மாதங்களுக்கு பேணிவருகின்ற உத்தமாவி கணக்கு வைத்திருப்பவர்கள்
-
சனச முதன்மைச் சமூக உறுப்பினர்கள்
-
கடன் திட்டத்திற்கான தங்க நாணயம் (08 கிராம்) மீதான ரூபாப் பங்கு பின்வருமாறு:
உத்தரவாதப்படுத்தப்பட்ட நிரந்தர வருமானத்துடன் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள்
- ரன்மினி கடன்: கடன்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் முதிர்ச்சியடைய வேண்டும்
- ரன்மினி அடகுச் சேவை: வயதெல்லை இல்லை
- உரிய முறையில் நிரப்பப்பட்ட கடன் விண்ணப்பப் படிவம் அல்லது அடகு வைத்த சிட்டை
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)