AthaMaru Short Term Loans | SDB bank Sri Lanka | SDB bank

அதமாறு எனப்படுகின்ற பாதுகாப்பான, குறுகிய தவணைக் கடன் திட்டமானது தனிப்பட்ட அல்லது வியாபார அவசரச் சூழ்நிலைகளின்போது, பிணையுறுதியாகத் தங்கத்தினை வைத்துப் பெறப்படுகின்ற குறைந்த வட்டியிலான கடன் கொடுக்கல் வாங்கல்களைக் குறிப்பிடுகின்றது.

அம்சங்களும் நன்மைகளும்
  • ஆகக்குறைந்தது 50,000 ரூபாய் முதல் ஆகக்கூடுதலாக 1,000,000 ரூபாய் வரைiயிலான குறைந்த கடன் தொகைக்கான குறுகிய கால 3 மாதக் கடன் வசதி
  • வருடத்திற்கு 0 சதவீத வட்டி
  • கணக்கினை வைத்திருப்பவர்கள் மொத்தத் தங்கத்தின் பெறுமதியில் 90 சதவீதம் வரையில் முற்கொடுப்பனவுக் கடனாகப் பெறமுடியும்
  • அதிநவீன உபகரணங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட தங்கத்தின் எடையின் துல்லியமும் பெறுமதியும்
  • துரிதம், அந்தரங்கம் மற்றும் உயர் மட்டத்திலான இரகசியத்தன்மை ஆகியவற்றினை உத்தரவாதப்படுத்துகின்ற ஒப்பற்ற சேவை
  • பிணையுறுதிகளுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்பு
தகைமை
  • விண்ணப்பதாரி
    • 18 வயதிற்குக் கீழ்ப்படாத இலங்கைப் பிரஜையாக இருக்கவேண்டும்
    • தங்கப் பிணையுறுதியைத் திருடியவராக அல்லது சட்டவிரோதமாகப் பெற்றவராகச் சந்தேகிக்கப்படுபவராக இருக்கக்கூடாது
  • தங்கப் பிணையுறுதியானது
    • குறைந்தது 18 கரட் அளவினைக் கொண்டிருக்கவேண்டும்
    • குறைந்தது 03 கிராம் எடையினைக் கொண்டிருக்கவேண்டும்

தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்

  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி