SDB bank | SDB சமுபசவிய

SDB சமுபசவிய

SDB சமுபசவிய

சங்கங்களுக்கான அபிவிருத்திக்கடன்

இக் கடன் வசதியானது, தமது சொத்துக்களினை நிதிரீதியாக அதிகரிப்பதற்கு போதுமான நிதி வசதியினைக் கொண்டிராத சணச சங்கங்களினை ஆதரிக்கும் நோக்கத்திற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் சங்கங்கள், தம்மை சார்ந்த சிறிய சங்கங்களுக்கு கைகொடுத்து அபிவிருத்தியடைவிக்கும்.

விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
  • நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில் ரூ. 2 மில்லியன் வரையிலான பிணைகளற்ற கடன்கள்.
  • மாதாந்த தவணைகளாக 3 வருடங்கள் வரையில் மீளச்செலுத்தும் காலம், 3 மாத கால சலுகைக் காலமும் வழங்கப்படும்.
 
தகைமைகள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பராமரிக்கப்படும் சங்கங்களினது கணக்குகளின் அடிப்படையில் கடன் வசதியை அங்கீகரிக்கும் பொறுப்பினை கிளை முகாமையாளர் தனிப்பட்ட ரீதியாக கொண்டுள்ளார்.

 

  • ரூ.10 மில்லியனுக்கும் குறைவான மொத்த சொத்துக்களின் பெறுமதியைக் கொண்ட சணச சங்கமாக இருத்தல் வேண்டும்.
  • சங்கத்தின் மீளச்செலுத்தும் திறனின் அடிப்படையில், தள்ளுபடிகளுக்காக 3 வருடங்களுக்கான தணிக்கைக் கோப்புக்கள்.
  • சங்கத்தின் செயற்படாத கடன்கள் (NPLs) 10% க்கு குறைவானதாக இருத்தல் வேண்டும்.
  • மீள்கடன் மற்றும்/அல்லது பணி மூலதனமாகவே கடன்கள் வழங்கப்படும்.
  • SDB/ வேறு வங்கிகள்/ மாவட்ட ஒன்றியங்கள்/சங்கம்/ வேறு நிதி நிறுவனங்களுடன் 6 மாதங்களுக்கான தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கல்கள் காணப்படல் வேண்டும்.
அவசியமான ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
  • சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
  • சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
  • சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
  • இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
  • சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
  • கையொப்ப அட்டை.