பணப்புழக்கம் மற்றும் செயற்பாட்டு மூலதன தேவைகளுக்கான கடன்
இது பணப்புழக்கம் மற்றும் பணி மூலதனத் தேவைகளுக்காகவென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குறுகிய கால கடன் ஆகும், இவை ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. எனவே, கூட்டுறவு மற்றும் சங்கங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுழலும் தொகையின் கீழ் கடன் வழங்கப்படும்.
விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
- சங்கத்தின் திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் அதிகபட்ச கடன் தொகை.
- நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில் மாதாந்த தவணைகளாக மீளச் செலுத்தக்கூடியது.
- வாரிய கடன் குழு மற்றும் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல்களுடன் ரூ. 30 மில்லியன் வரையில் உத்தரவாதங்களற்ற கடன் தொகை.
- ஆண்டு தோறும் மதிப்பாய்வு செய்யப்படும்.
தகைமைகள்
- சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
- ஒவ்வொரு கடன்களை பொறுத்து, அவற்றுக்கான ஆபத்தை குறைப்பதற்காக பொருத்தமான உத்தரவாதங்கள் அவசியமாகும்.
அவசியமான ஆவணங்கள்
- முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
- சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
- சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
- சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
- இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
- சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
- கையொப்ப அட்டை.
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்