SDB யானது, புதிதாக பிறந்த குழந்தை முதல் அனைத்து வகையிலுமான சிரேஷ்ட பிரஜைகள் வரையான அனைத்து வாடிக்கையாளர்களுக்குமான பரந்துபட்ட அளவிலான பல்வேறு வங்கியுற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தக்கூடிய இயலுமையினைக்கொண்டது.

சேமிப்புக் கணக்குகள்

SDBயானது தரம் மிக்க சேமிப்புக் கணக்குகளிலிருந்து விஷேட சேமிப்புக் கணக்குகள் வரையான முழு அளவிலான சேமிப்பு உற்பத்திகளை வழங்குகின்றது. SDBயானது நாடளாவிய கையடக்க வங்கிச் சேவையொன்றினை வழங்குகின்றது. எமது கையடக்க வங்கியாளர்கள் 45 பேர் பணத்தினை சேமிப்புக்கணக்குகளுக்கு மாற்றுவதற்கு வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

  • Visa அட்டையினை ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு உள்நாட்டு ATMயிலும் SDB Visa வரவட்டையானது பயன்படுத்தப்பட முடியும்.
  • கூட்டுறவாளர்களுக்கான SDB சேமிப்புக்கணக்குகள். கூட்டுறவுச் சேமிப்புகளுக்கான உயர் வட்டி வீதங்களை இச் சேமிப்புகள் வழங்குகின்றன.

எமது வைப்புத் தொகுப்பின் கீழுள்ள ஏனைய சேமிப்பு உற்பத்திகள் கீழே பட்டியற்படுத்தப்பட்டுள்ளன:

  • SDB சாதாரண சேமிப்புத் திட்டம்
  • லக்தரு
  • ஜவய
  • உத்தமாவி ப்ளஸ்
  • உபஹார

நிலையான வைப்புக்கள்

SDBயானது தரமான நிலையான வைப்புக்கள் மற்றும் விஷேடப்படுத்தப்பட்ட நிலையான வைப்புக்களை வழங்குகின்றது.

கடன்கள்

நுண் கடன் தொடக்கம் படைவீரர்கள் மற்றும் ஏனைய முதியோர்களுக்கான விஷேட கடன் வசதிகள் வரை நாட்டின் பல்வேறு பொருளாதார பகுதியினருக்கும் எமது கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.