எமது தூரநோக்கு

SDB யானது, வணிக வங்கியெனும் அந்தஸ்துடன் கூட்டுறவுத்துறையின் மிகச் சிறந்த வங்கி மட்டுமல்லாது உலகினை நோக்கிய தேசிய அபிவிருத்திக்கான முன்னணிப் பங்காளருமகும்.

 

எமது பணி

SDB யானது, நிரந்தரமான வாடிக்கையாளர் தளத்தினை விருத்தி செய்து பேணுவதோடு, பங்குரிமையாளர்களின் மூலதனத்திற்கான உயர் வருமான சாத்தியப்பாட்டினை சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக உயர் தரத்திலான, புத்தாக்கமுடைய மற்றும் தரமான நிதிச்சேவைகளை வழங்குவதன் மூலம் தமது வாடிக்கையாளர்களை அகமகிழச்செய்யும். தனித்துவமான உற்பத்திகள்/சேவைகள் என்பவை சணச இயக்கம், கூட்டுறவுத் துறை, சமூகம் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற எமது விஷேட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

கிடைக்கப்பெறுகின்ற வலையமைப்பு மற்றும் வங்கித்துறையில் காணப்படும் நவீன தொழில்நுட்பம் என்பவற்றின் பயன்பாட்டினூடாக தற்போதைய எமது வணிக எல்லையினை விஸ்தரிப்பதன் மூலம் நாங்கள் மேற்கண்டவாறு செயற்படுவோம். எமது அடைவுக்காக, வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி என்பவற்றிற்கான நிதி நிலைமையினை உறுதிப்படுத்துவதற்கான எமது பிரதான நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக, முன்னணி வகிக்கக்கூடிய சேவைகளை சிறப்பாக அடைந்துகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய உயர் போட்டித்தன்மையுடைய, ஊக்குவிக்கப்பட்ட தொழிலாளர் குழுவொன்றினை நாம் விருத்திசெய்து பேணுவோம்.

 

எமது விழுமியங்கள்

  • வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் போட்டியாளர்ளை கையாளும் போது அனைத்து நிலையிலும் வங்கி மற்றும் அதன் முகவர்கள் உயர் தரத்திலான நெறிமுறைகளை வளர்ப்பதற்கும் பேணுவதற்கும்.
  • நிதிச்சேவைகளை வழங்குவதில் புதுமை மற்றும் தேவைக்கான உந்துதல் இருத்தல் வேண்டும்.
  • அனைத்து வணிகச் செயற்பாடுகளிலும் பண்பு மற்றும் தொழில்வாண்மையுடன் இருப்பதற்கு.
  • சமயம், பால், இனம், சமூக நிலை மற்றும் மொழி என்பவற்றினடிப்படையிலான பாகுபாட்டினை தடுப்பதற்கு
  • நெறிமுறையற்ற மற்றும் சட்டரீதியற்ற தொழில் நடவடிக்கைகளுக்காக நிதிச் சேவைகளை விஸ்தரிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக.

 

உரிமையின் தன்மை மற்றும் சட்ட வகை:

1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டதோடு 2007ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்ட மற்றும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச்சட்டத்தின் (1995ஆம் ஆண்டின் வங்கித் திருத்தச்சட்டத்தின் திருத்தத்தின்படி) கீழ் இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் பெற்ற விஷேட வங்கியொன்றாக பதிவு செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களுடனான பொதுக்கம்பனியொன்றாகும் அதேவேளை, 1949ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க அடமானத் திருத்தச்சட்டத்தின்படி 1949ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க அடமானச் சட்டம் (திருத்தம்) மற்றும் 1947ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க நம்பிக்கைப் பெறுவனவுக் கட்டளைச்சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கடன் முகவருமாகும்.